ரெயில்வே மேம்பாலத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரு மாதத்துக்குள் இழப்பீட்டு தொகையை வழங்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி உத்தரவு


ரெயில்வே மேம்பாலத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரு மாதத்துக்குள் இழப்பீட்டு தொகையை வழங்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 18 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-19T04:00:40+05:30)

ரெயில்வே மேம்பாலத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரு மாதத்துக்குள் இழப்பீட்டு தொகையை வழங்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ரெயில்வே மேம்பாலம் புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே அரும்பார்த்தபுரத்தில் ரெயில்வே கேட் உள்ளது.

வில்லியனூர்

ரெயில்வே மேம்பாலத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரு மாதத்துக்குள் இழப்பீட்டு தொகையை வழங்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரெயில்வே மேம்பாலம்

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே அரும்பார்த்தபுரத்தில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு ரெயில் வரும் நேரங்களில் கேட் மூடப்படுவதால் புதுவை – விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே இங்கு மேம்பாலம் அமைக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

அதன்பேரில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமார் ரூ.30 கோடி மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வில்லியனூர், பொறையூர், குருமாம்பேட் வழியாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளதால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுபற்றி புதுவை கவர்னருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

கவர்னர் ஆய்வு

இந்நிலையில் கவர்னர் கிரண்பெடி, அதிகாரிகளுடன் சென்று நேற்று காலை அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்தார். தலைமை பொறியாளர் சாமிநாதன், மேம்பால கட்டுமானப் பணியின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கவர்னரை சூழ்ந்துகொண்டனர்.

அவர்கள், மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், மேம்பாலத்துக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் கூறி முறையிட்டனர்.

ஒரு மாதத்துக்குள்...

இதையடுத்து நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரு மாதத்துக்குள் இழப்பீடு தொகையை வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிடடார். மேம்பாலம் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் மேம்பாலம் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று உறுதி கூறினர்.

ஆய்வின்போது வில்லியனூர் சப்–கலெக்டர் விஜயகுமார், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story