குடிசை சீரமைப்பு திட்ட பணிகளை செய்யாமல் காலம் கடத்தும் கட்டுமான நிறுவனங்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் சட்டசபையில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேச்சு

குடிசை சீரமைப்பு திட்ட பணிகளை செய்யாமல் காலம் கடத்தி வரும் கட்டுமான நிறுவனங்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று சட்டசபையில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேசினார். தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூ
மும்பை
குடிசை சீரமைப்பு திட்ட பணிகளை செய்யாமல் காலம் கடத்தி வரும் கட்டுமான நிறுவனங்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று சட்டசபையில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேசினார்.
தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடந்தது. நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தொடரில் சயான் கோலிவாடா தொகுதி பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச்செல்வன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
சயான் கோலிவாடா தொகுதிக்குட்பட்ட இந்திரா நகர், மோதிலால் நேரு நகர், நிர்மல் நகர் ஆகிய இடங்களில் குடிசை சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பணிகளை மேற்கொள்ள தனியார் கட்டுமான நிறுவனங்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.
ரத்து செய்யவேண்டும்ஆனால் இந்த நிறுவனங்கள் சீரமைப்பு திட்டப் பணிகளை இன்னும் மேற்கொள்ளாமல் காலம் கடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு புதிய கட்டுமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவேண்டும்.
14 அடி உயரத்திற்கு மேல் கட்டப்பட்ட குடிசை வீடுகளை இடித்து தள்ளும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. 2008–ம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட குடிசை வீடுகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
சயான் கோலிவாடாவில் 60 ஆண்டு பழமையான வழிபாட்டு தலங்களை மும்பை மாநகராட்சி எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் இடித்து தள்ளி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.