தாதுவள நிறுவனத்தில் வேலை


தாதுவள நிறுவனத்தில் வேலை
x
தினத்தந்தி 19 Dec 2016 9:44 AM GMT (Updated: 19 Dec 2016 9:43 AM GMT)

மத்திய தாதுவள நிறுவனத்தில் மேலாளர், பொறியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- தாதுவள ஆய்வுக்கழக நிறுவனம் சுருக்கமாக எம்.இ.சி.எல் (MECL), என்று அழைக்கப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இதில் முதுநிலை மேலாளர், மேலாளர், உதவி மேலாளர், மெட்டீரியல் ஆபீசர், புரோகிராமர், தீயணைப்பு வீரர், தொ

த்திய தாதுவள நிறுவனத்தில் மேலாளர், பொறியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

தாதுவள ஆய்வுக்கழக நிறுவனம் சுருக்கமாக எம்.இ.சி.எல் (MECL), என்று அழைக்கப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இதில் முதுநிலை மேலாளர், மேலாளர், உதவி மேலாளர், மெட்டீரியல் ஆபீசர், புரோகிராமர், தீயணைப்பு வீரர், தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன், டிரைவர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 186 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

கல்வித் தகுதி:

பி.இ., பி.டெக், பி.எஸ்சி., எம்.எஸ்.சி., எம்.டெக், ஜியாலஜி, ஜியோபிஸிக்ஸ், முதுநிலை அறிவியல் படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. மேலாளர் தரத்திலான அதிகாரி பணியிடங்களுக்கு 45 வயதுடையவர்களும், மற்ற அலுவலக பணியிடங்களுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படுகிறது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு, திறமைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்தந்த பணிக்கு அவசியமான தேர்வுகள் பின்பற்றப்படும்.

கட்டணம் :

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் படைவீரர்கள் தவிர்த்து மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 12-1-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mecl.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

Next Story