நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை
x
தினத்தந்தி 19 Dec 2016 9:47 AM GMT (Updated: 2016-12-19T15:16:57+05:30)

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு 100 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. என அழைக்கப்படுகிறது. பொதுத்துறை

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு 100 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. என அழைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இதில் 2016-2017-ம் ஆண்டுக்கான கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிச்சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பட்டதாரி என்ஜினீயர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இவை கேட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும் பணியிடங்களாகும். இந்த ஆண்டு மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியாக மெக்கானிக்கல் - 50, எலக்ட்ரிக்கல் (இ.இ.இ.) - 15, எலக்ட்ரிக்கல் (இ.சி.இ.) 5, சிவில் - 10, மைனிங் - 10, கம்ப்யூட்டர் - 5 இடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 1-12-2016 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங் / தொழில்நுட்ப படிப்புகளில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பை நிறைவு செய்து கேட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

கேட் 2017 தேர்வில் பெறும் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். கேட் தேர்வு- நேர்காணலில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

கட்டணம்:

பொது மற்றும். ஓ.பி.சி. பிரிவினர் ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவர்கள் ஏற்கனவே கேட்-2017 தேர்வுக்கு விண்ணப்பித்து பதிவு எண் பெற்றிருக்க வேண்டும். அந்த பதிவு எண்ணை குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட வேண்டும். பணிக்கான விண்ணப்பம் 6-1-2017 அன்று இணைய தளத்தில் செயல்பாட்டிற்கு வரும் அது முதல் 31-1-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nlcindia.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

Next Story