தர்மபுரியில் ஓய்வூதியர் தின விழா


தர்மபுரியில்  ஓய்வூதியர் தின விழா
x
தினத்தந்தி 19 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-19T18:46:31+05:30)

தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின விழா தர்மபுரி சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயன் வரவேற்று பேசினார். ஓய்வு பெற

தர்மபுரி,

தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின விழா தர்மபுரி சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயன் வரவேற்று பேசினார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சவுந்தரம், மின்வாரிய அமைப்பின் தலைவர் சுந்தரமூர்த்தி, போக்குவரத்து கழக சங்க தலைவர் குப்புசாமி, சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கருத்தரங்கில் வருவாய்த்துறை ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் டியூக் பொன்ராஜ், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் அப்பாவு, அஞ்சல்துறை ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டமைப்பின் பொருளாளர் முனுசாமி நன்றி கூறினார்.


Next Story