அரக்கோணம் தொகுதியை புயலால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டருக்கு சு.ரவி எம்.எல்.ஏ. கோரிக்கை மனு


அரக்கோணம் தொகுதியை புயலால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டருக்கு சு.ரவி எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
x
தினத்தந்தி 19 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-19T21:15:33+05:30)

அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ. சு.ரவி கலெக்டர் ராமனுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:– கடந்த 12–ந் தேதி வார்தா புயல் காரணமாக அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்து வி

அரக்கோணம்,

அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ. சு.ரவி கலெக்டர் ராமனுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:–

கடந்த 12–ந் தேதி வார்தா புயல் காரணமாக அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தது. 300–க்கும் மேற்பட்ட குடிசைகளும் மழையால் பாதிக்கப்பட்டு இடிந்து விழுந்தது. பல இடங்களில் கால்நடைகள் மற்றும் வாத்து, கோழி போன்றவை இறந்துள்ளது. தக்கோலம் பகுதியில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் ஏற்ப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதியாக காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டம் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் சாலைகள், அரசு கட்டிடங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகவே இவைகள் எல்லாம் கருத்தில் கொண்டு அரக்கோணம் சட்டமன்ற தொகுதியை புயலால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தேவையான நிவாரண நிதியை போர்க்கால அடிப்படையில் அரக்கோணம் தொகுதிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story