ஓசூரில் பணம் எடுக்க வங்கி, ஏ.டி.எம். மையங்களில் காத்து கிடக்கும் பொதுமக்கள்


ஓசூரில் பணம் எடுக்க வங்கி, ஏ.டி.எம். மையங்களில் காத்து கிடக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 19 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-19T21:38:06+05:30)

ஓசூரில் வங்கி, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் காத்து கிடக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. மத்திய அரசு அறிவிப்பு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8–ந் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்து

ஓசூர்,

ஓசூரில் வங்கி, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் காத்து கிடக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

மத்திய அரசு அறிவிப்பு

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8–ந் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்து ஒரு மாதம் கடந்த பிறகும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் தங்களிடம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் தினமும் கூட்டம், கூட்டமாக மக்கள் நின்றார்கள்.

இந்த நிலையில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது, அதை சேமிப்பு கணக்கில் தான் போட முடியும் என்று அறிவிப்பு வெளியானது. இதனால் பொதுமக்கள் பலர் தாங்கள் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் போடுவதற்காக வரிசையில் நிற்கிறார்கள்.

கடன் வாங்கும் நிலை

இது ஒருபுறமிருக்க வங்கி ஏ.டி.எம். மையங்களில் புதிய 2 ஆயிரம் மட்டுமே வருகின்றன. அதுவும் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என்ற கட்டுப்பாடும் உள்ளது. இதனால் செலவுக்கு கூட பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் பொதுமக்கள் பலர் தங்களின் சேமிப்பு கணக்கில் பணம் இருந்தும் பிறரிடம் கடன் வாங்கி அத்திவாசிய செலவுகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

மேலும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் அவர்களின் வங்கி கணக்குகளில் போடப்பட்டுள்ளதால் அந்த பணத்தை எடுப்பதற்காக அவர்கள் நாள்தோறும் ஏ.டி.எம். மையங்களிலும், வங்கிகளும் காத்து கிடக்கிறார்கள். ஓசூர் நகரில் மட்டும் மொத்தம் 82 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இதில் 90 சதவீத ஏ.டி.எம். மையங்கள் இயங்கவில்லை. 10 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. அந்த ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கிறார்கள்.

தளர்த்த வேண்டும்

அதிலும் சில மணி நேரங்களிலேயே பணம் தீர்ந்துவிடுவதால் பின்னால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டுகளை உடனடியாக அதிக அளவில் புழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும், ஏ.டி.எம். எந்திரங்களில் அதிக அளவில் பணம் வைக்க வேண்டும் என்றும், ரூ.2 ஆயிரம் தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story