மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி
x
தினத்தந்தி 19 Dec 2016 9:45 PM GMT (Updated: 2016-12-19T22:04:01+05:30)

மானாமதுரை அழகர்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அங்குச்சாமி(65). விவசாயியான இவர், தனது மனைவி பாப்பாத்தியுடன் நேற்று மோட்டார் சைக்கிளில் மானாமதுரை–தாயமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் மானாமதுரை சீனியப்பா நகரை சேர்ந்த ரிஷி என்ற வாலிபரும் மோட்டார் சை

மானாமதுரை,

மானாமதுரை அழகர்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அங்குச்சாமி(65). விவசாயியான இவர், தனது மனைவி பாப்பாத்தியுடன் நேற்று மோட்டார் சைக்கிளில் மானாமதுரை–தாயமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் மானாமதுரை சீனியப்பா நகரை சேர்ந்த ரிஷி என்ற வாலிபரும் மோட்டார் சைக்கிளில் அந்த சாலையில் வந்துள்ளார். மானாமதுரை அரசு ஆஸ்பத்திரி அருகே வந்த அங்குச்சாமி, ரிஷி ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதியது. இதில் கீழே விழுந்த அங்குச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பாப்பாத்தி, வாலிபர் ரிஷியை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story