விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்


விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-19T22:57:50+05:30)

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என கலெக்டர் எல்.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு

விழுப்புரம்,

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என கலெக்டர் எல்.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் எல்.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசியதாவது:–

விழுப்புரம் மாவட்டம் மழையை நம்பி உள்ள மாவட்டம். ஒவ்வொரு ஆண்டும் பெய்ய வேண்டிய மழை பெய்யாமல் போகும்போது விவசாயிகள் படும் இன்னல்களுக்கு பயிர் காப்பீடு மிகவும் அவசியம். எனவே விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

பயிர் காப்பீடு

இதற்கு முன்பு இருந்த திட்டம் அவ்வளவு பயன் உள்ளதாக இல்லாததால் விவசாயிகள் நிவாரணம் பெற இயலவில்லை. தற்போதுள்ள திட்டத்தில் விவசாயிகள் நிச்சயம் பயன்பெறுவார்கள். ஆனால் பயிர் காப்பீடு செய்வதில் விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் சேரவில்லை. ஆகவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள், விவசாயிகள் கடன் பெறும்போது கடன் பெறாத ஒவ்வொரு விவசாயியையும் இந்த திட்டத்தில் சேர்க்க உதவ வேண்டும்.

தற்போது மணிலா, உளுந்து, மரவள்ளி, வெங்காயம், மக்காச்சோளம், வாழை போன்ற பயிர்களுக்கு நவரை பட்டத்தில் நெல் பயிருக்கும், வருகிற பிப்ரவரி மாதம் 15–ந் தேதி வரை கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் கூட்டுறவு சரக துணைப்பதிவாளர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story