போலீசாரின் சம்பள பணம் கையாடல் விவகாரம்: மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் 25 பேர் இடமாற்றம்?


போலீசாரின் சம்பள பணம் கையாடல் விவகாரம்: மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் 25 பேர் இடமாற்றம்?
x
தினத்தந்தி 19 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-19T23:40:32+05:30)

நாகை மாவட்டம், சீர்காழி பகுதியை சேர்ந்தவர் ஹிதாயத்துல்லா (வயது 48). போலீஸ் ஏட்டான இவர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சம்பள பிரிவில் வேலை பார்த்து வந்தார். இவர் போலீசாருக்கான சம்பளம் உள்ளிட்ட பண பரிவர்த்தனை செய்வதில் போலியான பில் பட்டியல

மதுரை,

நாகை மாவட்டம், சீர்காழி பகுதியை சேர்ந்தவர் ஹிதாயத்துல்லா (வயது 48). போலீஸ் ஏட்டான இவர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சம்பள பிரிவில் வேலை பார்த்து வந்தார். இவர் போலீசாருக்கான சம்பளம் உள்ளிட்ட பண பரிவர்த்தனை செய்வதில் போலியான பில் பட்டியல்களை தயார் செய்தல், இரட்டிப்பு பணப்பலன் செய்தல் ஆகிய முறைகேடுகளில் ஈடுபட்டு பணத்தை மோசடி செய்ததை போலீஸ் சூப்பிரண்டு கண்டுபிடித்தார்.

சுமார் ரூ.2 கோடிக்கும் மேல் பணம் கையாடல் செய்த அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் சூப்பிரண்டு அலுவலகத்தில் சம்பள பிரிவில் வெகுநாட்களாக வேலை பார்க்கும் போலீஸ்காரர்களின் நடவடிக்கையை ஆய்வு செய்யும்படி உத்தரவு வந்துள்ளது.

அதை தொடர்ந்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்பள பிரிவு, போலீசாருக்கு பில் போடும் பிரிவு, விடுமுறை பிரிவு ஆகியவற்றில் வெகுநாட்களாக வேலை பார்க்கும் போலீசார் எத்தனை பேர் என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதையொட்டி சுமார் 25–க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story