மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கக்கோரி வழக்கு மத்திய–மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கக்கோரி வழக்கு மத்திய–மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-19T23:41:55+05:30)

ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் நாகராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:– மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளுவது கூடாது என்றும், அந்த வேலையை செய்து வந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும், இந்த தொழிலில் யாரும் ஈடுபடுத்தப்பட

மதுரை,

ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் நாகராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளுவது கூடாது என்றும், அந்த வேலையை செய்து வந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும், இந்த தொழிலில் யாரும் ஈடுபடுத்தப்படாமல் தடுப்பதை மேற்பார்வை செய்ய மத்தியில் பிரதமர் தலைமையில் குழுவும், மாநிலங்களில் முதல்–அமைச்சர் தலைமையில் குழுவும், மாவட்ட அளவில் கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்க வேண்டும் என்றும் கடந்த 2013–ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்டத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வீடு, அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி, மாற்று தொழில் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும், மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படவில்லை.

மேலும் ரெயில்நிலையங்கள் அனைத்திலும் மனித கழிவுகளை துப்புரவு தொழிலாளர்கள் கைகளால் தான் அள்ளும்நிலை தற்போது வரை நீடிக்கிறது. தண்டவாளங்களில் மலம் அள்ளுவதற்கு கருவிகள் வழங்கப்படவில்லை. இதனை தவிர்த்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் குடும்பத்தினருக்கு வீடு, கல்வி, மாற்றுதொழில் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்தவும், மேற்பார்வை, கண்காணிப்பு குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர், மத்திய–மாநில அரசு அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.


Next Story