சேலம் குறைதீர்க்கும் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


சேலம் குறைதீர்க்கும் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 19 Dec 2016 11:15 PM GMT (Updated: 2016-12-20T00:57:30+05:30)

சேலத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். விவசாயிகள் மனு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். இதில் பல

சேலம்,

சேலத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

விவசாயிகள் மனு

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அப்போது கொளத்தூர் ஆலமரத்துப்பட்டி, கண்ணாமூச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அதில், திருப்பூர் மாவட்டம் ராசிபாளையம் முதல் கர்நாடக மாநிலம் பாலவாடி வரை உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக எங்கள் விவசாய நிலங்கள் வழியாகவும் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு முதலில் இழப்பீடு தருவதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது சம்பந்தப்பட்டவர்கள் இழப்பீடு தொகையை முழுமையாக வழங்கவில்லை. எனவே எங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

வீட்டுமனை பட்டா

ஓமலூர் அருகே உள்ள கோட்டமேட்டுப்பட்டி ஆர்.சி. செட்டிப்பட்டி காலனி பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், நாங்கள் கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள தோப்பு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தி வந்தோம். இதை குத்தகைக்கு வேறு நபருக்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் வசிக்கும் வகையில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

சேலம் பாராமஹால் நாணயவியல், தபால் தலையியல் சங்க இயக்குனர் சுல்தான் உள்பட 3 பேர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக அட்டைகளை கழுத்தில் அணிந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், அமெரிக்காவின் பீட்டாவுக்கும், ஜல்லிகட்டிற்கும் என்ன சம்பந்தம், நாய், ஒட்டகம், குதிரை, கழுதை, யானை, பூனை, கொல்லப்படுகிறதே காளைகள் மீது கரிசனம் ஏன்?, பாரதீய ஜனதா அமைச்சர்கள் ஜல்லிக்கட்டுக்கு இன்று வரும், நாளை வரும் என்று சொன்னார்களே என்று வரும் என சொல்ல முடியுமா? என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.


Next Story