ஈரோட்டில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-20T00:58:29+05:30)

மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்திய முகிலன் என்பவர் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற

ஈரோடு

மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்திய முகிலன் என்பவர் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சமர்பாகுமரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அ.கணேசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் பேசினார்கள். இதில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தற்சார்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர் பொன்னையன், கனிராவுத்தர்குளம் மீட்பு இயக்கத்தலைவர் நிலவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story