கொடுமுடி அருகே லாரி–சரக்கு ஆட்டோ மோதல்; 2 வாலிபர்கள் சாவு


கொடுமுடி அருகே லாரி–சரக்கு ஆட்டோ மோதல்; 2 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 19 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-20T00:58:31+05:30)

கொடுமுடி அருகே லாரியும், சரக்கு ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். நேருக்கு நேர் மோதல் நாமக்கல் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சூரியபிரகாஷ் (வயது 20). சரக்கு ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் செ

கொடுமுடி,

கொடுமுடி அருகே லாரியும், சரக்கு ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

நேருக்கு நேர் மோதல்

நாமக்கல் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சூரியபிரகாஷ் (வயது 20). சரக்கு ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சர்வேஸ்வரன் (22). சூரியபிரகாசும், சர்வேஸ்வரனும் நண்பர்கள் ஆவர்.

இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் நாமக்கல்லில் இருந்து கோவை நோக்கி சரக்கு ஆட்டோவில் நேற்று சென்று கொண்டிருந்தனர். சரக்கு ஆட்டோவை சூரியபிரகாஷ் ஓட்டினார். அவருக்கு அருகில் சர்வேஸ்வரன் உட்கார்ந்திருந்தார். ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த பள்ளக்காட்டூர் அருகே சென்றபோது எதிரே ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி வந்த லாரியும், சரக்கு ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

சாவு

இதில் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதுடன், தாறுமாறாக ஓடி ரோட்டோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் இருந்து சூரியபிரகாஷ், சர்வேஸ்வரன் ஆகியோர் ரோட்டில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே 2 பேரும் துடிதுடிக்க பரிதாபமாக இறந்தனர். விபத்து ஏற்பட்டதும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த சூரியபிரகாஷ், சர்வேஸ்வரன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story