ஆண்டிப்பட்டி அருகே ரூ.7 கோடி மதிப்பில் மாவட்ட மத்திய சிறைச்சாலை கட்டுமான பணிகள் தீவிரம்


ஆண்டிப்பட்டி அருகே ரூ.7 கோடி மதிப்பில் மாவட்ட மத்திய சிறைச்சாலை கட்டுமான பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 19 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-20T01:05:22+05:30)

ஆண்டிப்பட்டி அருகே ரூ.7 கோடி மதிப்பில் மாவட்ட மத்திய சிறைச்சாலைக்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மதுரை மத்திய சிறை தேனி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களையும் தண்டனை கைதிகளையும் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்து வர

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி அருகே ரூ.7 கோடி மதிப்பில் மாவட்ட மத்திய சிறைச்சாலைக்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மதுரை மத்திய சிறை

தேனி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களையும் தண்டனை கைதிகளையும் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்து வருகிறார்கள். இதனால் கால விரயமும், பணவிரயமும் ஏற்பட்டு வந்தது. இதையொட்டி தேனி மாவட்டத்தில் மத்திய சிறைச்சாலை கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆண்டிப்பட்டி தாலுகா தேக்கம்பட்டி ஊராட்சியில் சமத்துவபுரம் பின்புறம் உள்ள அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது குறித்து தமிழக அரசு காவலர் வீட்டுவசதி கழகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

ரூ.7 கோடி ஒதுக்கீடு

அதன்பேரில் தேக்கம்பட்டியில் புதிய மாவட்ட மத்திய சிறைச்சாலை கட்டுவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து 200 கைதிகள் தங்கும் வகையில் கூட்டு அறைகள், தனி அறைகள் கொண்ட 6 கட்டிடங்கள், 2 சுற்றுச்சுவர், 3 கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் நவீன பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.

தற்போது இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. வருகிற 2017–ம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

குடியிருப்புகள்

இந்த பணிகளுடன் சிறைச்சாலை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கான குடியிருப்புகளும் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான மதிப்பீட்டு தொகையும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story