ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-20T01:14:18+05:30)

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க கோரி அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி, உலக தமிழர் இளைஞர் பேரவை, வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வீர விள

திண்டுக்கல்,

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க கோரி அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி, உலக தமிழர் இளைஞர் பேரவை, வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சின்னையா உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், பீட்டா, புளூ கிராஸ் அமைப்புகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அவர்கள் கூறியதாவது:–

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும். மேலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதில், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story