கோவை போலீஸ் நிலையங்களில் பெண் வரவேற்பாளர்கள் 54 பேர் நியமனம்


கோவை போலீஸ் நிலையங்களில் பெண் வரவேற்பாளர்கள் 54 பேர் நியமனம்
x
தினத்தந்தி 19 Dec 2016 10:15 PM GMT (Updated: 19 Dec 2016 8:10 PM GMT)

கோவை போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை வரவேற்க பெண் வரவேற்பாளர்கள் 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண் வரவேற்பாளர்கள் போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் எந்தவித தயக்கமும், பயமும் இன்றி போலீசை அணுகுவதற்காக போலீஸ் நில

கோவை,

கோவை போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை வரவேற்க பெண் வரவேற்பாளர்கள் 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண் வரவேற்பாளர்கள்

போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் எந்தவித தயக்கமும், பயமும் இன்றி போலீசை அணுகுவதற்காக போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர்களாக பெண் போலீசாரை நியமிக்க தமிழக காவல்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டார். அந்த வகையில் சென்னையில் அனைத்து போலீஸ் நிலை யங்களிலும் பெண் போலீசாரை வரவேற்பாளர்களாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அது போல் கோவை நகரில் 15 போலீஸ் நிலையங்கள், கோவை மாவட்டத்தில் 37 போலீஸ் நிலையங் கள் என்று மொத்தம் 52 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர்களாக பணியாற்ற மொத்தம் 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதல்கட்டமாக 2 நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

அப்போது, போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களை வரவேற்பது? புகார் மனுக்களை பெற்று பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிப்பது எப்படி? என்று வரவேற்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நட்புறவை வளர்ப்பது பற்றியும் பயிற்சி அளிக் கப்பட்டது.

கனிவுடன் நடக்க உத்தரவு

பயிற்சி பெற்ற பெண் போலீசார், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பாளர்களாக பணி யமர்த்தப்பட்டு உள்ளனர். வரவேற்பாளர்கள் போலீஸ் நிலையங்களில் காலை முதல் இரவுவரை பணியில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களை கனிவுடன் நடத்தி அவர்களிடம் மனுக்களை பெறுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் வரவேற்பாளர்கள் பொது மக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கான அடுத்த கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 23 மற்றும் 24–ந் தேதிகளில் நடைபெறுகிறது.


Next Story