குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 19 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-20T02:00:34+05:30)

பொங்கலூரில் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை பொங்கலூர் ஒன்றியம், தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா காலனி. இங்கு சுமார் 700–க்கும் மேற்பட்ட குடும்ப

பொங்கலூர்

பொங்கலூரில் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை

பொங்கலூர் ஒன்றியம், தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா காலனி. இங்கு சுமார் 700–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு கடந்த சில நாட்களாக போதுமான அளவு குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் குடிநீர் சீராக வழங்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒன்றிய ஆணையாளர் மகுடேஸ்வரியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:– எங்கள் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. அதுவும் தற்போது முறையாக வருவதில்லை.

தீர்வு

சுகாதாரம், தார் சாலை வசதி என்று அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. தண்ணீருக்காக நாங்கள் பல்வேறு இடங்களுக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. காசு கொடுத்து தண்ணீர் வாங்கவேண்டியுள்ளது. இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் அடுத்தவாரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு சென்று முறையிடுவோம். என்று தெரிவித்தனர்.

இது குறித்து கேட்டறிந்த ஒன்றிய ஆணையாளர் இன்னும் ஒரு வாரத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.


Next Story