திருச்சி ஆழ்வார்தோப்பில் முதியோர் ஓய்வூதியம் வாங்க ஏராளமானோர் திரண்டதால் தள்ளு, முள்ளு


திருச்சி ஆழ்வார்தோப்பில் முதியோர் ஓய்வூதியம் வாங்க ஏராளமானோர் திரண்டதால் தள்ளு, முள்ளு
x
தினத்தந்தி 19 Dec 2016 11:00 PM GMT (Updated: 19 Dec 2016 9:09 PM GMT)

திருச்சி ஆழ்வார்தோப்பில் முதியோர் ஓய்வூதியம் வாங்க ஏராளமானோர் திரண்டதால் தள்ளு, முள்ளு

திருச்சி,

திருச்சி ஆழ்வார்தோப்பில் முதியோர் ஓய்வூதியம் வாங்க ஏராளமானோர் திரண்டதால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

முதியோர் ஓய்வூதியம்

திருச்சி மாநகராட்சி 49-வது வார்டுக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் நேற்று காலை முதியோருக்கு ஓய்வூதியத்தொகை வழங்கப்பட்டது. இந்த ஓய்வூதிய தொகையை பெற நேற்று அதிகாலை முதலே ஏராளமானோர் குவியத்தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமானது.

அங்கு வந்த வங்கி ஊழியர் ஒருவர் ஆவணங்களை சரிபார்த்து வரிசையில் நின்றவர்களுக்கு ஓய்வூதிய தொகையை வழங்கினார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் அங்கு சென்று கூட்ட நெரிசலை சரி செய்தனர்.

போலீசாருடன் தள்ளு, முள்ளு

அப்போது வரிசையில் நின்றவர்கள் போலீசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளு, முள்ளுவில் ஈடுபட்டனர். அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் வாக்கி டாக்கி கீழே விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே முதியோர் ஓய்வூதியம் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் ஷோபா அங்கு சென்று கூட்டத்தில் நின்ற முதியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இன்னும் ஓரிரு நாட்களில் மற்றவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நேற்று காலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story