கோவில்பட்டியில் ரெயில் மோதி பொக்லைன் ஆபரேட்டர் பலி உடல் துண்டு, துண்டாக கிடந்த பரிதாபம்


கோவில்பட்டியில் ரெயில் மோதி பொக்லைன் ஆபரேட்டர் பலி உடல் துண்டு, துண்டாக கிடந்த பரிதாபம்
x
தினத்தந்தி 19 Dec 2016 9:10 PM GMT (Updated: 19 Dec 2016 9:10 PM GMT)

கோவில்பட்டியில் ரெயில் மோதி பொக்லைன் ஆபரேட்டர் பலி உடல் துண்டு, துண்டாக கிடந்த பரிதாபம்

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் ரெயில் மோதியதில், பொக்லைன் ஆபரேட்டர் உடல் துண்டாகி பரிதாபமாக பலியானார்.

பொக்லைன் ஆபரேட்டர்

கோவில்பட்டி இனாம் மணியாச்சி மேல தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது 54). இவர், பெங்களூரில் பொக்லைன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் காயம் அடைந்ததில் இவர் பேச்சுத்திறனை இழந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. தற்போது இவர், கோவில்பட்டி இனாம் மணியாச்சியில் தங்கை குருவம்மாள் (45) வீட்டில் வசித்து வந்தார்.

ரெயில் தண்டவாளத்தில் பிணம்

நேற்று முன்தினம் மாலையில் லட்சுமி நாராயணன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் இரவில் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை தங்கை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் உடல், முகம் சிதைந்த நிலையில் ஆண் பிணம் துண்டு துண்டாக சிதறி கிடந்தது.

ரெயில் மோதி பலி

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரெயில் தண்டவாளத்தில் சிதைந்து கிடந்தவரை அடையாளம் காண போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு வந்த குருவம்மாள், இறந்தவர் லட்சுமி நாராயணன் என்பதை உறுதி செய்தார்.

இறந்தது எப்படி?

இறந்த லட்சுமி நாராயணின் உடல் பாகங்களை போலீசார் சேகரித்து பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லட்சுமி நாராயணன் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்தாரா? தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்தாரா? வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் தீவிர விசாரணை

லட்சுமி நாராயணன் இரவிலேயே ரெயில் மோதி இறந்து இருக்கலாம் என்றும், அந்த வழியாக பல ரெயில்கள் சென்றதால் அவரது உடல் துண்டு துண்டாகி இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story