வலுதூக்கும் சங்க பொதுக்குழு கூட்டம்


வலுதூக்கும் சங்க பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-20T02:41:45+05:30)

வலுதூக்கும் சங்க பொதுக்குழு கூட்டம்

கரூர்,

கரூர் மாவட்ட வலுதூக்கும் சங்க பொதுக்குழு கூட்டம் கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமணி தலைமை தாங்கினார். செயலாளர் வீர.திருப்பதி, பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் நாகராஜ் கலந்து கொண்டு, வலு தூக்கும் போட்டி தொடர்ச்சியாக தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற ஜனவரி மாதம் 12-ந் தேதி கோவையில் தேசிய அளவிலான போட்டி நடக்கிறது என்று கூறினார். கூட்டத்தில் கரூரில் மாநில, மாவட்ட அளவில் வலுதூக்கும் போட்டி நடத்துதல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story