மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பலி டிரைவர் கைது


மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பலி டிரைவர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-20T02:45:01+05:30)

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். லாரி மோதி பலி சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் பர்மா காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பூபாலன் (வயது 20). இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார்

ஆலந்தூர்,

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

லாரி மோதி பலி

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் பர்மா காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பூபாலன் (வயது 20). இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை உள்ளகரத்தில் உள்ள வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். உள்ளகரம்–மேடவாக்கம் சாலையில் சென்றபோது சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பூபாலன் பலியானார்.

டிரைவர் கைது

இதுபற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்மணி வழக்குப்பதிவு செய்தார்.

இதுதொடர்பாக லாரி டிரைவர் செய்யாரை சேர்ந்த வெங்கடேசன் (28) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர் சாவு

* சித்தாலபாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நமச்சிவாயம் (45), மாம்பாக்கம் சாலையில் சென்றபோது கார் மோதியதில் இறந்தார். இதுதொடர்பாக கார் டிரைவர் புரசைவாக்கத்தை சேர்ந்த மோகன் (48) கைது செய்யப்பட்டார்.

* கடந்த 12–ந்தேதி ‘வார்தா’ புயலின்போது மரம் விழுந்ததில் படுகாயம் அடைந்த துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராமராஜ் (25) ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

* நீலாங்கரை அருகே உள்ள பனையூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுரேஷ் (32), சந்துரு (28) ஆகியோரின் வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் இரு வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமாயின.

* ஆவடி கோவர்த்தனகிரி கலைஞர் நகரை சேர்ந்தவர் சங்கர் (45). கடந்த 14–ந்தேதி மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று முன்தினம் இறந்தார்.

* கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த ஜோயல் (52), வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த அவரது கார் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.


Next Story