வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயரிங் பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை வயல்பகுதியில் பிணமாக கிடந்த பரிதாபம்


வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயரிங் பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை வயல்பகுதியில் பிணமாக கிடந்த பரிதாபம்
x
தினத்தந்தி 20 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-21T00:52:43+05:30)

பேட்டையில் என்ஜினீயரிங் பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். என்ஜினீயர் நெல்லை டவுன் தடிவீரன் கோவில் மேலத் தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் தங்கி வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு 2 வ

பேட்டை,

பேட்டையில், வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயரிங் பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வயல் பகுதியில் பிணம்

நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர் வயல் பகுதியில் நேற்று அதிகாலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இறந்து கிடந்தவரின் உடல் அருகே வயலுக்கு அடிக்கக்கூடிய பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது. எனவே அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

என்ஜினீயரிங் பட்டதாரி

விசாரணையில், இறந்து கிடந்தவர் நெல்லை டவுன் தடிவீரன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த தாயுமானவர் மகன் சுவாமிநாதன்(வயது 22) என்பது தெரிய வந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் தங்கி வேலை தேடி வந்தார். ஆனாலும் அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தனது பெரியப்பா வீட்டிற்கு வந்தார். ஊருக்கு வந்ததில் இருந்து மிகுந்த சோகத்துடனேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சினிமாவிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து வயல்வெளியில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. வேலை கிடைக்காத விரக்தியில் சுவாமிநாதன் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வருகிறது. இருந்தாலும் சுவாமிநாதனின் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story