தமிழக–கேரள எல்லை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரம்


தமிழக–கேரள எல்லை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரம்
x
தினத்தந்தி 20 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-21T01:41:36+05:30)

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக–கேரள எல்லை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள நிலம்பூர், அட்டபாடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நட

மசினகுடி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக–கேரள எல்லை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள நிலம்பூர், அட்டபாடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளதாக தெரிகிறது. அவர்கள் தமிழக–கேரள எல்லையில் உள்ள நீலகிரி மாவட்ட வனப்பகுதிக்குள்ளும் வர வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தமிழக போலீசாரும், கேரள வனத்துறையினரும் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு வரகின்றனர். கடந்த மாதம் கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. அப்போது 2 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டு கொன்றனர். குண்டு காயம் அடைந்த சிலர் தப்பி ஓடியதாக தெரிகிறது.

தேடுதல் வேட்டை

இதையடுத்து நீலகிரி மாவட்ட எல்லை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதிகளிலும், தமிழக–கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதிகளிலும் நீலகிரி மாவட்ட மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே நடுவட்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களாக முதுமலை காட்டில் உள்ள மாயார் பள்ளத்தாக்கு உள்பட தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியிலும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையின் போது மாவோயிஸ்டுகள் நடமாட்டத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். தேடுதல் வேட்டையின் போது மசினகுடி போலீசாரும் உடன் சென்றிருந்தனர்.


Next Story