உணவு பொருட்கள் முறையாக வழங்கக்கோரி ரேஷன்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


உணவு பொருட்கள் முறையாக வழங்கக்கோரி ரேஷன்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2016 9:30 PM GMT (Updated: 20 Dec 2016 8:28 PM GMT)

உணவு பொருட்கள் முறையாக வழங்கக்கோரி ரேஷன்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன்கடை முற்றுகை ஆனைமலையை அடுத்துள்ள ஒடையன்குளம் மெயின்ரோட்டில் 10–வது வார்டு பகுதி மக்களுக்கான ரேஷன் கடை உள்ளது. இதில் மொத்தம் 940 ரேஷன்கார்டு தாரர்கள்

ஆனைமலை

உணவு பொருட்கள் முறையாக வழங்கக்கோரி ரேஷன்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன்கடை முற்றுகை

ஆனைமலையை அடுத்துள்ள ஒடையன்குளம் மெயின்ரோட்டில் 10–வது வார்டு பகுதி மக்களுக்கான ரேஷன் கடை உள்ளது. இதில் மொத்தம் 940 ரேஷன்கார்டு தாரர்கள் உள்ளன. இந்த ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை, மண்எண்ணெய், பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடந்த 3 மாதங்களாக முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னாள் கவுன்சிலர் தர்மராஜ் தலைமையில் ரேஷன் கடையில் முறையாக உணவு பொருட்கள் வினியோகம் செய்யக்கோரி நேற்று ரேஷன்கடையை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் தெரிந்த ஆனைமலை சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், நாகராஜ் மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம், பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டாலும் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வருகிறது. 35 கிலோ அரிசிக்கு பதிலாக 20 கிலோ மட்டுமே தருகின்றனர் என்று தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த ரேஷன் கடையின் விற்பனையாளர் ஜோதிமணியை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஜோதிமணி கடையில் பொருட்கள் போதுமான அளவு வராததால் குறைந்த அளவே பொருட்கள் வழங்கி வருகிறோம். இனிமேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதைடுயத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story