குற்றச்செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


குற்றச்செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 20 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-21T02:16:34+05:30)

ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்கிற தினேஷ்குமார்(வயது 25). கடந்த 1–ந் தேதி அம்மாபேட்டை எல்லையப்பன் தெருவை சேர்ந்த கவிதா என்பவர் சங்கரன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது தினேஷ்குமார் தனது கூட்டாளிகளான தாதம்பட்டியை சேர்ந்த ரவி மற்றும்

ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்கிற தினேஷ்குமார்(வயது 25). கடந்த 1–ந் தேதி அம்மாபேட்டை எல்லையப்பன் தெருவை சேர்ந்த கவிதா என்பவர் சங்கரன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது தினேஷ்குமார் தனது கூட்டாளிகளான தாதம்பட்டியை சேர்ந்த ரவி மற்றும் ஆயிஷா ஆகியோருடன் சேர்ந்து கவிதாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 3 பவுன் நகையை பறித்து சென்று விட்டனர்.

இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தினேஷ்குமார் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். கைதான தினேஷ்குமார் மீது ஏற்கனவே அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்து தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் நேற்று உத்தரவிட்டார்.


Next Story