பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26-ந் தேதி நடைபெறும் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26-ந் தேதி நடைபெறும் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு
x
தினத்தந்தி 20 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-21T02:27:04+05:30)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26-ந் தேதி நடைபெறும் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு

திருவாரூர்,

பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி 26-ந் தேதி நடைபெறும் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாதர் சங்க தலைவர் மாலாபாண்டியன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முற்றுகை போராட்டம்

விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நெற்பயிர் கருகியதால் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமுற்ற விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் 26-ந் தேதி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளித்து கலந்து கொள்வது. முன்னதாக கோரிக்கை குறித்து தெருமுனை பிரசாரம் செய்து பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Next Story