சேலம் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை


சேலம் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 20 Dec 2016 8:57 PM GMT (Updated: 2016-12-21T02:27:07+05:30)

சேலம் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை

கொண்டலாம்பட்டி,


சேலம் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

சேலம் கொண்டலாம் பட்டி அருகே உள்ள உத்தம சோழபுரம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 45). இவருக்கு சொந்தமாக கரபுரநாதர் கோவில் அருகே எலக்ட்ரிக்கல் கடை உள்ளது. நேற்று முன்தினம் சண்முகம் மேட்டூருக்கு வேலை நிமித்தமாக சென்றார். அப்போது எலக்ட்ரிக்கல் கடையில் சண்முகத்தின் மனைவி ஜெயந்தி (38) இருந்தார்.

பிற்பகலில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் அந்த கடைக்கு வந்தனர். அதில் ஒருவன் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தபடி வண்டியிலேயே இருந்தான். மற்றொரு நபர், கடைக்கு வந்து சில மின்சாதன பொருட்களை ஜெயந்தியிடம் கேட்டுள்ளார். அந்த பொருட்களை எடுக்க ஜெயந்தி திரும்பிய போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடினார்.

போலீசார் விசாரணை

உடனே ஜெயந்தி திருடன், திருடன் என கூச்சலிட்டார். அதே நேரத்தில் அந்த 2 மர்ம நபர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த நகைபறிப்பு சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஜெயந்தி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகைபறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story