தள தணிக்கை செய்யும் பணி ஆய்வு


தள தணிக்கை செய்யும் பணி ஆய்வு
x
தினத்தந்தி 20 Dec 2016 8:59 PM GMT (Updated: 2016-12-21T02:29:17+05:30)

தள தணிக்கை செய்யும் பணி ஆய்வு

குளித்தலை,

ரேஷன் கார்டுகளை “ஸ்மார்ட்” கார்டுகளாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி வருவாய்த்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் குளித்தலை பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று ரேஷன் கார்டுக்குரிய உறுப்பினர்களின் ஆதார் எண், கைபேசி எண், பெயர், முகவரி, சமையல் எரிவாயு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சரிபார்த்து பதிவேடுகளில் குறித்து வரும் பணியை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குளித்தலை கோட்டாட்சியர் சக்திவேல், வட்டாட்சியர் சக்திவேல் ஆகியோர் குளித்தலை கலப்பு காலனி பகுதியில் உள்ள அமுதம் அங்காடி மற்றும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் தள தணிக்கை செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ரேஷன் கார்டில் குறிப்பிட்டுள்ளபடி சரியான முகவரியில் நபர்கள் இருக்கின்றனரா?, அவர்கள் தங்களது ஆதார் எண்ணை சரியாக இணைத்துள்ளனரா? என்பன உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் நேரடியாக கேட்டறிந்தனர்.

Next Story