மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்குவதற்கான செய்முறை தேர்வு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்குவதற்கான செய்முறை தேர்வு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 20 Dec 2016 10:45 PM GMT (Updated: 20 Dec 2016 8:59 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்குவதற்கான செய்முறை தேர்வு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு

கரூர்,

கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் எந்திரங்கள் பெறுவதற்காக விண்ணப்பித்த பயனாளிகளில் தகுதியான நபர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தையல் தொழில் தெரிந்தவர்களுக்கு விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் தையல் எந்திரங்கள் வழங்குவதற்காக தையல் தொழில் தெரிகிறதா? என்று தையல் எந்திரங்கள் மூலம் செய்முறை தேர்வு இன்று (நேற்று) நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் அனைவருக்கும் விரைவில் தையல் எந்திரங்கள் வழங்கப்படவுள்ளது. இந்த தையல் எந்திரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளில் தையல் தொழில் தெரிந்தவர்கள் உரிய சான்றிதழுடன் விண்ணப்பித்தால் உடனடியாக தையல் எந்திரங்கள் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story