500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முடங்கியது விவசாயிகள் பாதிப்பு

அரியலூர்,
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
அரியலூர் ராஜாஜி நகரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இந்த விற்பனைக்கூடத்துக்கு தினசரி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக் கணக்கான விவசாயிகள் தங்களது வயல்களில் விளைந்த முத்துசோளம், கம்பு, வரகு, மல்லி, மிளகாய், கடலை போன்ற தானியங்களை கொண்டு வந்து அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்து, அதற்கு உரிய தொகையை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 8-ந்தேதி மத்திய அரசு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தி அதனை மக்கள் எடுத்து வருகின்றனர். மேலும் ரூபாய் நோட்டு பிரச்சினையால் விவசாயிகள், விவசாய தேவைகளுக்காக வங்கிகளில் பணம் எடுக்க முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கான தொகையை ரொக்கமாக தர வேண்டும். மாறாக காசோலை வேண்டாம் என விவசாயிகள் கூறி வருகின்றனர்.
வியாபாரம் முடங்கியது
இதனால் அங்கு வணிகம் பாதிப்படைந்தது. 40 நாட்களாக ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வரவில்லை. இதனால் கோடிக் கணக்கான ரூபாயில் நடைபெறும் வியாபாரம் முடங்கியது. சுமை தூக்கும் தொழிலாளிகள் வேலையில்லாமல் பாதிப்படைந்துள்ளனர்.
இது தொடர்பாக அரியலூர் நகர மிளகாய் மண்டி வியாபாரிகள் சங்க செயலாளர் தங்கவேலு கூறுகையில், கடந்த ஆண்டு விளைவித்த தானியங்களை விவசாயிகள் விற்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். வங்கி கணக்கில் ரூ.24 ஆயிரம் எடுப்பதே சிரமமாக உள்ளது. பணத்தட்டுப்பாட்டால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மளிகை பொருட்களின் விலை ஏறிவருகிறது. கிடங்கில் வாங்கி வைத்துள்ள தானியங்கள் வீணாகி வருகிறது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் பயிர் களும் கருகி விட்டன. வரும் ஆண்டில் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும். பணப்புழக்கம் சரியாகாமல் போனால் சிறு வியாபாரிகள் மிகவும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்.

Next Story