தண்டராம்பட்டில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தண்டராம்பட்டு,
தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சின்னப்பா, மாநில துணை செயலாளர் ஜனார்த்தனன், தமிழ்நாடு விவசாய பசுமை புரட்சி முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஞானப்பழம், பொதுச்செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கரும்பு டன் ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். தண்டராம்பட்டை அடுத்த கொழுந்தம்பட்டில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கரும்பு வெட்டும் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்று கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Next Story