வடசேரி பஸ் நிலையத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு


வடசேரி பஸ் நிலையத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-21T02:33:24+05:30)

வடசேரி பஸ் நிலையத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நேற்று ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்குள்ள கட்டண கழிப்பறை, இலவச கழிப்பறை ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

வடசேரி பஸ் நிலையத்தைச்சுற்றி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. பஸ் நிலையத்தில் கழிவுநீர் பைப் உடைந்து துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல் பஸ் நிலையத்தின் பின்புறமும் துர்நாற்றம் வீசுகிறது. குமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தின் நிலை படுமோசமாக உள்ளது.

கேரளாவில் இருந்து அதிகாலை வேளையில் கழிவுகளைக்கொண்டு வந்து வடசேரி பஸ் நிலையத்துக்கு எதிரே கொட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து கழிவுகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தி, அவற்றை கொண்டு வருபவர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு சுரேஷ்ராஜன் கூறினார். இந்த ஆய்வில் தி.மு.க. நிர்வாகிகள் சேக்தாவூது, சாகுல்ஹமீது, ஜெயசிங், வேல்முருகன், நாஞ்சில் மணி, வளர் அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story