புதுச்சேரியில் வருகிற 28–ந் தேதி நடைபெறும் அரசியலமைப்பு சட்டப்பாதுகாப்பு மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
புதுச்சேரியில் வருகிற 28–ந் தேதி நடைபெறும் அரசியலமைப்பு சட்டப்பாதுகாப்பு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் சட்டமன்ற தொகுதி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு கூட்டம் விடுதலை சிறு
கடலூர்
புதுச்சேரியில் வருகிற 28–ந் தேதி நடைபெறும் அரசியலமைப்பு சட்டப்பாதுகாப்பு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் சட்டமன்ற தொகுதி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் சட்டமன்ற தொகுதி செயற்குழு கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது. நகர ஒருங்கிணைப்பாளர் கிட்டு வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர்கள் சுகுமாறன், நாகவேந்தன், நகர செயலாளர்கள் ராஜதுரை, சேதுராமன், ஒன்றிய செயலாளர்கள் புரட்சிவளவன், கலைஞர், மாவட்ட செய்தி தொடர்பாளர் புதியவன், துணை செயலாளர் அஸ்கர்அலி, நகர பொருளாளர்கள் இமானுவேல், கரிகாலன், ஒன்றிய பொருளாளர்கள் தமிழரசன், பெருமாள்ராஜா, இணை செயலாளர் கோவிந்தன் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் நகர பொருளாளர் கோபால் என்கிற இடிமுரசு நன்றி கூறினார்.
தீர்மானங்கள்கூட்டத்தில், கடலூர் பஸ்நிலையத்தில் கட்டப்பட இருக்கும் வணிகவளாகத்தில் ஆதிதிராவிட பழங்குடியினருக்கு தொழில்புரிய இடம் ஒதுக்க வேண்டும், வணிகவளாகம் கட்டி முடித்த பின்னர் கடைகளை பொது ஏலம் விட வேண்டும், பொதுமக்கள் ஆதார் அட்டையை எளிதாக பெறும் வகையில் கிராமங்கள் தோறும் முகாம் நடத்த வேண்டும், அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பிரிவு 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், நகராட்சியில் 45 வார்டுகளிலும் பலலட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை உடனடியாக திறக்க வேண்டும், புதுச்சேரியில் வருகிற 28–ந் தேதி(புதன்கிழமை) நடைபெறும் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.