குருங்குளம் சர்க்கரை ஆலையில் ரூ.118 கோடியில் நவீனமயமாக்கல் பணி: தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவர் ஆய்வு

தஞ்சாவூர்,
குருங்குளம் சர்க்கரை ஆலையில் ரூ.118 கோடியில் நடைபெற்று வரும் நவீனமயமாக்கல் பணியை தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவர் மகேஷ்காசிராஜன் ஆய்வு செய்தார்.
ஆய்வு
தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் ரூ.118 கோடி மதிப்பில் நவீனமயமாக்கல் பணியும், இணை மின் உற்பத்தி திட்ட பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணியை தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவரும், நிர்வாக ஆணையருமான மகேஷ்காசிராஜன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கரும்பு எடை போடும் மையத்திற்கு சென்று ஆய்வு செய்த அவர், அரவைக்காக வெட்டி கொண்டு வரப்படும் கரும்பின் எடை சரியாக உள்ளதா? என்று பார்வையிட்டார்.
முன்னதாக அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் கூட்ட அரங்கில் தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் 41-வது பேரவை கூட்டத்தின் முன்மாதிரி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவரும், நிர்வாக ஆணையருமான மகேஷ்காசிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
கோரிக்கைகள்
கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மிக விரைவில் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மகேஷ்காசிராஜன் தெரிவித்தார். கூட்டத்தில் பயிற்சி கலெக்டர் பிரசாத், தமிழ்நாடு சர்க்கரை கழக பொதுமேலாளர் மகேஸ்வரி ரவிக்குமார், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி சிவசவுந்தரவள்ளி மற்றும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story