ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது 30 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து ராஜபாளையத்துக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆம்னி பஸ் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான ஏ.சி. வசதி கொண்ட ஆம
ஸ்ரீவில்லிபுத்தூர்
சென்னையில் இருந்து ராஜபாளையத்துக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆம்னி பஸ்விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான ஏ.சி. வசதி கொண்ட ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ராஜபாளையத்துக்கு புறப்பட்டது. அதில் 30 பயணிகள் இருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ராமலிங்காபுரத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி(வயது54) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். கோவிந்தராஜ்குமார்(29) என்பவர் மாற்று டிரைவராக இருந்தார். அந்த பஸ் நேற்று காலை 6 மணியளவில் மதுரை–செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
தீப்பிடித்து எரிந்தது
அப்போது பஸ்சின் பின்பகுதியில் தீப்பிடித்து புகை வந்தது. இதனை கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தவர் பார்த்து அலறினார். உடனே டிரைவர் தட்சிணாமூர்த்தி பஸ்சினை ரோட்டோரத்தில் நிறுத்தினார். பயணிகள் அனைவரும் உஷார் படுத்தப்பட்டு அனைவரும் அவசரம் அவசரமாக கீழே இறங்கினார்கள்.
அதற்குள் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அதிகாரி பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் பஸ் முழுவதுமாக எரிந்து போனது. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். எனினும் பஸ்சில் இருந்த லக்கேஜ்களை எடுக்க முடியாததால் அவை எரிந்து நாசமானது.
விசாரணைஎரிந்து போன பஸ்சின் மதிப்பு பல லட்சரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து நத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.