29-ம் ஆண்டு நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24-ந் தேதி அ.தி.மு.க.வினர் அஞ்சலி


29-ம் ஆண்டு நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24-ந் தேதி அ.தி.மு.க.வினர் அஞ்சலி
x
தினத்தந்தி 21 Dec 2016 4:45 AM IST (Updated: 21 Dec 2016 4:45 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை,

அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 24-12-1987. அவரது 29-வது ஆண்டு நினைவு நாளான 24-12-2016 சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில், அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அவரது நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், அ.தி.மு.க. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கட்சி தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story