72-வது முறையாக சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது


72-வது முறையாக சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது
x
தினத்தந்தி 21 Dec 2016 4:48 AM IST (Updated: 21 Dec 2016 4:48 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 72-வது முறையாக தடுப்பு சுவர் கண்ணாடி உடைந்து விழுந்தது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 72-வது முறையாக தடுப்பு சுவர் கண்ணாடி உடைந்து விழுந்தது.

தொடர் சம்பவங்கள்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அங்கு இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 24 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 24 முறை தடுப்பு கண்ணாடிகளும், 6 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒரு முறை விளக்கு கண்ணாடி, ஒரு முறை அறிவிப்பு பலகை டி.வி.கள் என 71 முறை உடைந்து விழுந்து உள்ளன. இந்த தொடர் சம்பவங்களில் 13 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

72-வது முறையாக...

இந்த நிலையில் 72-வது முறையாக மீனம்பாக்கம் பன்னாட்டு முனையம் புறப்பாடு பகுதி விமானங்கள் நிறுத்தப்படும் இடங்களில் 4 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட 2 தடுப்பு சுவர் கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ‘வார்தா’ புயலின் போது பாதிக்கப்பட்ட கண்ணாடிகள் உடைந்து விழுந்து விட்டதாகவும், அதனை சீரமைக்கும் பணிகளும் நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story