பெரம்பூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
சென்னை பெரம்பூரில் உள்ள எம்.கே.பி. நகர் பகுதியில் மர்மநபர்கள் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதாக எம்.கே.பி. நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூரில் உள்ள எம்.கே.பி. நகர் பகுதியில் மர்மநபர்கள் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதாக எம்.கே.பி. நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எம்.கே.பி. நகரில் நின்று கொண்டிருந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தப்பி ஓடியவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்டவரிடம் விசாரித்தபோது அவர் சாஸ்திரி நகரை சேர்ந்த விஜயகுமார் (வயது 48) என்றும் அப்பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்று வந்ததும் தெரியவந்தது.
விஜயகுமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் எழுதி வைத்திருந்த துண்டு சீட்டுகள், ரூ.500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story