அடையாறு மண்டலத்தில் ‘வார்தா’ புயலால் சாய்ந்த 3 ஆயிரத்து 6 மரங்கள் அகற்றப்பட்டன மரக்கழிவுகள் அகற்றப்பட்ட இடங்களில் ‘பிளச்சிங்’ பவுடர் தெளிப்பு


அடையாறு மண்டலத்தில் ‘வார்தா’ புயலால் சாய்ந்த 3 ஆயிரத்து 6 மரங்கள் அகற்றப்பட்டன மரக்கழிவுகள் அகற்றப்பட்ட இடங்களில் ‘பிளச்சிங்’ பவுடர் தெளிப்பு
x

சென்னை அடையாறு மண்டலத்தில் வார்தா புயலால் சாய்ந்த 3 ஆயிரத்து 6 மரங்கள் அகற்றப்பட்டன. சென்னையில் மரக்கழிவுகள் அகற்றப்பட்ட இடங்களில் பிளச்சிங் பவுடர் தெளிக்கப்படுகிறது.

சென்னை,

சென்னை அடையாறு மண்டலத்தில் வார்தா புயலால் சாய்ந்த 3 ஆயிரத்து 6 மரங்கள் அகற்றப்பட்டன. சென்னையில் மரக்கழிவுகள் அகற்றப்பட்ட இடங்களில் பிளச்சிங் பவுடர் தெளிக்கப்படுகிறது.

வார்தா புயல்

சென்னையில் வார்தா புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணி தொடர்ந்து இரவு-பகலாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வெளிப்புற சாலைகளில் சாய்ந்த மரங்கள் அகற்றும் பணி நிறைவடைந்துவிட்டது. உள்புற சாலைகளில் சாய்ந்த மரங்களையும், மரக்கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை அடையாறு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி செயற்பொறியாளர் சம்பத் குமார் நேரடி மேற்பார்வையில், மாநகராட்சி ஊழியர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர். தன்னார்வலர்களும் தாமாக முன் வந்து மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து மரக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தன்னார்வலர்கள் பணி

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் அடையாறு மண்டலத்தில் தான் அதிக மரங்கள் வார்தா புயலுக்கு சாய்ந்துள்ளது. சுமார் 3 ஆயிரத்து 6 மரங்கள் வேறோடு சாய்ந்ததாக கணக்கெடுக்கப்பட்டது. அந்த மரங்களை அகற்றும் பணி முடிவடைந்துவிட்டது.

தற்போது உள்புற சாலைகளில் உள்ள மரக்கழிவுகளை அகற்றும் பணி 24 மணி நேரமும் நடக்கிறது. இதற்காக 60 ஜே.சி.பி. வாகனங்களும், 121 லாரிகளும், 79 மரங்கள் அறுக்கும் எந்திரங்களும், 21 மினி வேனும் அடையாறு மண்டலத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

வார்தா பாதிப்பு மீட்பு பணி 95 சதவீதம் முடிந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அடையாறு மண்டலம் இயல்புநிலைக்கு கொண்டு வரப்படும். மாநகராட்சி ஊழியர்களுக்கு இணையாக தன்னார்வலர்களும் துப்புரவு பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொற்றுநோய் அபாயம்

இதே போன்று சென்னை முழுவதும் சாய்ந்த மரங்களையும், மரக்கழிவுகளையும் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மரக்கழிவுகள் அகற்றப்பட்ட பகுதிகளிலும், தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகளிலும் தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் பிளச்சிங் பவுடர் தெளிக்கும் பணியும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. 

Next Story