நீடிக்கும் பணத்தட்டுப்பாடு: பண்டிகை கால செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதி வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் முன்பு தவம்


நீடிக்கும் பணத்தட்டுப்பாடு: பண்டிகை கால செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதி வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் முன்பு தவம்
x
தினத்தந்தி 21 Dec 2016 5:02 AM IST (Updated: 21 Dec 2016 5:02 AM IST)
t-max-icont-min-icon

நீடிக்கும் பணத்தட்டுப்பாட்டால் பண்டிகை கால செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிபடுகின்றனர்.

சென்னை,

நீடிக்கும் பணத்தட்டுப்பாட்டால் பண்டிகை கால செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிபடுகின்றனர்.

பணத்தட்டுப்பாடு

இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் தற்காலிக பணத்தட்டுப்பாடு இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு குறைந்த அளவு பணத்தையே வழங்கி வருகிறது.

இதனால் வங்கிகள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பணத்தை வழங்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் செலவுக்கு போதிய அளவு பணம் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிறார்கள்.

தினமும் வங்கிகள் முன்பும், ஏ.டி.எம். மையங்கள் முன்பும் பணத்திற்காக தவம் கிடக்கிறார்கள். ஏ.டி.எம். மையங்களிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளே அதிகம் கிடைப்பதால் சில்லரை தட்டுப்பாடும் மக்களை சிரமத்துக்குள்ளாகி உள்ளது.

ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளையொட்டி பணத்தேவை அதிகரித்துள்ள நிலையில் பணம் கிடைக்காதது மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

சாமானிய மக்களுக்கு வங்கிகள் குறைந்த தொகை வழங்குவதற்கே கெடுபிடி காட்டுகிறது. ஆனால் எப்படி சிலரிடம் மட்டும் கோடிக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கிறது என்பது மக்களின் ஆதங்கமாக இருக்கிறது.

பண தட்டுப்பாடு எப்போது நீங்கும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 10, 20, 50, 100, 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி 3 ஷிப்டுகளாக முழுவீச்சில் நடக்கிறது. பின்னர் அந்த ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி கிளைகளுக்கு அனுப்பப்படும். எனவே 15 நாட்களுக்குள் பண தட்டுப்பாடு நிலைமை சீரமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.’ என கூறினார். 

Next Story