செங்கம் அருகே மாரியம்மன் கோவிலில் 3 பவுன் தாலி, உண்டியல் பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


செங்கம் அருகே மாரியம்மன் கோவிலில் 3 பவுன் தாலி, உண்டியல் பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Dec 2016 2:30 AM IST (Updated: 21 Dec 2016 7:35 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே மாரியம்மன் கோவிலில் 3 பவுன் தாலி, உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– மாரியம்மன் கோவில் செங்கம் அருகேயுள்ள புதியகுயிலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இ

செங்கம்

செங்கம் அருகே மாரியம்மன் கோவிலில் 3 பவுன் தாலி, உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

மாரியம்மன் கோவில்

செங்கம் அருகேயுள்ள புதியகுயிலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் 16–ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலில் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவிலின் வெளிப்புற இரும்புகேட் மற்றும் உள்பக்க மரக்கதவின் பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தாலி, உண்டியல் பணம் திருட்டு

அதன்பேரில் செங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் அம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி சங்கிலி மற்றும் கோவில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருட்டு போனதும், அம்மன் அணிந்திருந்த மூக்குத்தி, கோவிலில் இருந்த 7 வெள்ளி குத்துவிளக்குகள் ஆகியவற்றை மர்மநபர்கள் விட்டு சென்றிருப்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story