வேட்டவலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு
வேட்டவலத்தை அடுத்த ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிவேல் (வயது 67), விவசாயி. இவர் கடந்த 18–ந் தேதி அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சைக்கிளில் சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். விழுப்புரம்– திருவண்ணாமலை சாலை ஆவூர் அருகே சென்றபோது அந்த வழியாக
வேட்டவலம்
வேட்டவலத்தை அடுத்த ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிவேல் (வயது 67), விவசாயி. இவர் கடந்த 18–ந் தேதி அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சைக்கிளில் சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். விழுப்புரம்– திருவண்ணாமலை சாலை ஆவூர் அருகே சென்றபோது அந்த வழியாக கீழ்கரிக்கூர் கிராமத்தை சேர்ந்த முருகன் (35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் காசிவேல், முருகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதைக்கண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் காசிவேல் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காசிவேல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வேட்டவலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.