வெம்பாக்கம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
வெம்பாக்கம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் வெம்பாக்கம்– காஞ்சீபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் வினியோகம் வெம்பாக்கம் அருகே சுமங்கலி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பொதும
வெம்பாக்கம்,
வெம்பாக்கம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் வெம்பாக்கம்– காஞ்சீபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வினியோகம்வெம்பாக்கம் அருகே சுமங்கலி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். சுமங்கலி கிராமத்திற்கு வெம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கிராமமக்கள் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அதன்பின்னரும் கடந்த 3 நாட்கள் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அதனால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
நேற்று காலை தெருகுழாய்களில் குடிநீர் வரும் என்று பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் வெகுநேரமாகியும் குடிநீர் வரவில்லை.
சாலை மறியல்இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலை 11 மணியளவில் குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் வெம்பாக்கம் – காஞ்சீபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பாக்கம் தாசில்தார் பெருமாள், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ரங்கசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் வெம்பாக்கம்– காஞ்சீபுரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.