ஈரோடு சத்தி ரோடு பகுதியில் கிணற்று நீரில் சாயக்கழிவு கலப்பதாக அதிகாரியிடம் புகார்
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் சாயக்கழிவு கலந்த கிணற்று நீரை கேனில் எடுத்துக்கொண்டு, ஈரோடு கோட்டை நேரு வீதியில் உள்ள ஈரோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் செயற்பொறியாளர் மணிமாறனை சந்தித்து ஒரு ப
ஈரோடு,
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் சாயக்கழிவு கலந்த கிணற்று நீரை கேனில் எடுத்துக்கொண்டு, ஈரோடு கோட்டை நேரு வீதியில் உள்ள ஈரோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் செயற்பொறியாளர் மணிமாறனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
ஈரோடு சத்தி ரோடு பகுதியில் 20–க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக நீர் நிலைகளில் கலக்கப்படுகிறது. மேலும் சாயக்கழிவுகளை குழி தோண்டி புதைத்தும் வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட சாயப்பட்டறைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.