கல்லட்டி மலைப்பாதையில் பஸ்சை வழிமறித்த யானை பயணிகள் பீதி
கல்லட்டி மலை பாதையில் அரசு பஸ்சை காட்டு யானை ஒன்று வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். மலைப்பாதையில் சுற்றி திரியும் யானை நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான சாலைகளில் கல்லட்டி பாதையும் ஒன்று. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண
மசினகுடி
கல்லட்டி மலை பாதையில் அரசு பஸ்சை காட்டு யானை ஒன்று வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.
மலைப்பாதையில் சுற்றி திரியும் யானைநீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான சாலைகளில் கல்லட்டி பாதையும் ஒன்று. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைபாதை அடர்ந்த வனப்பகுதியின் வழியாக செல்வதால் காட்டு யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டத்தை அடிக்கடி பார்க்க முடியும். குறிப்பாக இந்த சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் காட்டு யானைகள் இரவு நேரங்களில் சாலைக்கு வந்து சுற்றி திரிவது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக ஒற்றை ஆண் யானை இந்த மலை பாதையில் முகாமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பெண் யானையும் மலை பாதையில் சுற்றி திரிந்து வருகிறது. பைசன்வேலி முனை முதல் கல்லட்டி சோதனை சாவடி வரை உள்ள வனப்பகுதியில் சுற்றி திரியும் இந்த பெண் யானை இரவு நேரங்களில் சாலைக்கு வந்து விடுகிறது. சாலைக்கு வரும் அந்த யானை வாகனங்கள் வந்தாலும் கண்டுகொள்வதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பஸ்சை வழிமறித்ததுஇந்த நிலையில் நேற்று காலை 8.15 மணி அளவில் அந்த பெண் யானை கல்லட்டி மலைப்பாதையில் உள்ள 25–வது கொண்டை ஊசி வளைவில் நடுரோட்டில் நின்றிருந்தது. அப்போது மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு அந்த வழியாக வந்த அரசு பஸ்சை கண்டவுடன் பஸ்சை நோக்கி யானை வேகமாக நடந்து வந்தது. காட்டு யானை நடந்து வருவதை கண்ட அரசு பஸ் டிரைவர் செய்வதறியாமல் பஸ்சை அதே இடத்தில் நிறுத்தினா£.
பஸ்சின் அருகில் வந்த அந்த யானையை கண்ட பயணிகள் பீதி அடைந்தனர். சிறிது நேரம் பஸ்சை வழிமறித்த அந்த காட்டு யானை சாலையின் ஓரத்திற்கு சென்று நின்றது. இதை பார்த்த டிரைவர் நைசாக பஸ்சை அங்கிருந்து ஓட்டி சென்றார். அதன் பிறகே பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பெருமூச்சு விட்டனர். இதே போல் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களுக்கும் அதே நிலை ஏற்பட்டது. சுமார் அரை மணிநேரம் சாலையிலிலேயே நின்றிருந்த அந்த காட்டு யானை 27–வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வனப்பகுதிக்குள் சென்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.