வால்பாறையில் குடியிருப்புக்கு அருகே படுத்து கிடந்த சிறுத்தைப்புலி பொதுமக்கள் ஓட்டம்


வால்பாறையில் குடியிருப்புக்கு அருகே படுத்து கிடந்த சிறுத்தைப்புலி பொதுமக்கள் ஓட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2016 3:30 AM IST (Updated: 22 Dec 2016 1:09 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் குடியிருப்புக்கு அருகே படுத்து கிடந்த சிறுத்தைப்புலியை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். சிறுத்தைப்புலி நடமாட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 2 மாதங்களாகவே சிறுத்தைப்புலியின் நடமாட்டம் எஸ்டேட் பகுதிகளில் மட்டுமல்லாமல், வால்பாறை நகர் பகுதிய

வால்பாறை,

வால்பாறையில் குடியிருப்புக்கு அருகே படுத்து கிடந்த சிறுத்தைப்புலியை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

சிறுத்தைப்புலி நடமாட்டம்

வால்பாறை பகுதியில் கடந்த 2 மாதங்களாகவே சிறுத்தைப்புலியின் நடமாட்டம் எஸ்டேட் பகுதிகளில் மட்டுமல்லாமல், வால்பாறை நகர் பகுதியிலும் இருந்து வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளிலும், வால்பாறை–பொள்ளாச்சி மெயின்ரோடு பகுதிகளிலும் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலிகள் ஆடு மன்றும் மாடுகளை கடித்துக்கொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பும் தொழிலாளர்கள் சிறுத்தைப்புலியை நேரில் பார்த்துள்ளனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை 5.45 மணிக்கு லோயர்பாரளை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள உயர்மின் அழுத்த கோபுரம் அருகே சிறுத்தைப்புலி ஒன்று படுத்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த எஸ்டேட் பகுதி மக்கள் அனைவரும் பகல் நேரத்திலேயே சிறுத்தைப்புலி குடியிருப்புக்கு அருகே படுத்து கொண்டிருப்பதை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

சிலர் வீடுகளை விட்டு வெளியே வந்து சிறுத்தைப்புலியை பார்த்தனர். நீண்ட நேரத்துக்கு பிறகு சிறுத்தைப்புலி தேயிலை தோட்டம் வழியாக குதித்து ஓடி வனப்பகுதிக்குள் சென்றது. சிறுத்தைப்புலி குறித்து வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எஸ்டேட் பகுதிகளிலும், வால்பாறை நகர் பகுதியிலும் வால்பாறை வனச்சரக வனத்துறையினரும், மனித–வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் வால்பாறை நகர் பகுதி பொதுமக்களும், எஸ்டேட் பகுதி மக்களும் அன்றாடம் சிறுத்தைப்புலிகள் நடமாடி வரும் இடங்களில் வனத்துறையினர் கூண்டுகள் வைத்து சிறுத்தைப்புலிகளை பிடித்து அடர்ந்த வேறு வனப்பகுதிகளில் கொண்டு போய் விடவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.


Next Story