கோவையில் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் பாரபட்சமின்றி ரூபாய் நோட்டுகளை வினியோகம் செய்ய வலியுறுத்தல்


கோவையில் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் பாரபட்சமின்றி ரூபாய் நோட்டுகளை வினியோகம் செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 1:09 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து வங்கிகளுக்கும் பாரபட்சமின்றி ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டம் கோவை மாவட்ட அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பி

கோவை,

அனைத்து வங்கிகளுக்கும் பாரபட்சமின்றி ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஜவான் பவனில் உள்ள முன்னோடி வங்கி (கனரா வங்கி) முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வணங்காமுடி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:–

பாரபட்சமின்றி நோட்டுகள்

அனைத்து வங்கிகளுக்கும் ரூபாய் நோட்டுகளை பாரபட்சமின்றி ரிசர்வ் வங்கி வினியோகம் செய்து, இந்த சிக்கலான சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். கூடுதல் நேரம் உழைக்கும் அதிகாரிகளுக்கு பணிச் சுமைக்கு தக்க ஊதியம் வழங்க வேண்டும். பொதுமக்கள் மின்னணு பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபின் பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்காக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பெரிதும் கவலை கொள்கிறது. இந்த நடவடிக்கையின் நோக்கம் சரியானதே என்ற போதும், பொதுமக்களின் அவதி தவிர்க்க முடியாததாகி விட்டது. 40 நாட்களாக வேலைப்பளு, மனச்சோர்வு, அழுத்தமான பணிச்சூழல் இருந்த போதும் பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் பொதுமக்களின் சேவைக்காக பணியாற்றி வருகின்றன.

ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்

ரிசர்வ் வங்கியில் இருந்து தனியார் வங்கிகளுக்கு அதிகளவில் புதிய நோட்டுகள்ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், கிராம, நகர்ப்புறங்களில் 70 சதவீதம் மக்களுக்கு சேவையாற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு மிகவும் குறைவாகவே பணம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் வரும் செய்திகள் கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த நவம்பர் 8–ந் தேதி முதல் தனியார் வங்கிகளுக்கும், பொதுத்துறை வங்கிகளுக்கும் ஒதுக்கி உள்ள புதிய நோட்டுகள் குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.

அப்படி வெளியிடாத பட்சத்தில், அரசு வங்கிகளுக்கு அவப்பெயர் தருவது மட்டுமின்றி, தனியார் மயமாக்கலை ஊக்குவிக்கும் அரசின் இன்னொரு முயற்சியாக இது இருக்கலாம் என கூட்டமைப்பு சந்தேகப்படுகிறது.

மின்னணு பரிவர்த்தனை

வங்கிகளில் ஆங்காங்கே நடைபெறும் சில நேர்மையற்ற செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. நட வடிக்கைக்கு உரியவை. யாராக இருந்தாலும் தவறான வழிமுறைகளை பின்பற்றி ரூபாய் நோட்டுகளை மாற்றுவதை கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அதுபோன்ற செயல்களுக்கு துணை போவதை எப்போதுமே எங்களுடைய தொழிற்சங்கம் எதிர்க்கிறது.

நாட்டை பொருளாதார ரீதியாக மேலெடுத்து செல்லும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் கூட்டமைப்பு துணை நிற்கிறது. ஆனால் அது பொதுமக்களுக்கு இடர் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். பொது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், தேவையான அளவு பணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, ரூபாய் நோட்டுகளின் சுழற்சிக்கு உதவிட வேண்டும். பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனைக்கு மாற முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.


Next Story