காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி போக்குவரத்துத்துறை பணியாளர்கள் உண்ணாவிரதம்


காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி போக்குவரத்துத்துறை பணியாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 22 Dec 2016 3:15 AM IST (Updated: 22 Dec 2016 1:36 AM IST)
t-max-icont-min-icon

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி போக்குவரத்துத்துறை பணியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதம் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர் ஒன்றிப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்,

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி போக்குவரத்துத்துறை பணியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதம்

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர் ஒன்றிப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். மண்டல துணைத்தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் ராசசெல்வி வரவேற்றார். தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் சுந்தர்ராஜன் சிறப்புரையாற்றினார்.

போக்குவரத்து துறையில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் முதல் வட்டார போக்குவரத்து அலுவலர் வரை அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர்கள் பன்னீர்செல்வம், பழனி, பொருளாளர் ஜெயகணேஷ், நிர்வாகிகள் ராசாமணி, சுந்தரமூர்த்தி, சங்கரலிங்கம், பொன்முடி, வீரப்பன், சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மண்டல பொருளாளர் வில்வம் நன்றி கூறினார்.


Next Story