பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் மாத சம்பளம் பெறுவோருக்கு வங்கி, எல்.ஐ.சி., வருங்கால வைப்பு நிதி மூலம் பெறப்படும் கடன்களை நெய்வேலியில் உள்ள வங்கிகள் ரொக்கமாக அளித
நெய்வேலி,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்மாத சம்பளம் பெறுவோருக்கு வங்கி, எல்.ஐ.சி., வருங்கால வைப்பு நிதி மூலம் பெறப்படும் கடன்களை நெய்வேலியில் உள்ள வங்கிகள் ரொக்கமாக அளித்திட கோரியும், வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் எடுக்க வழிவகை செய்யும் வகையில் வராக்கடன் ரூ.12 லட்சம் கோடியை வசூலித்திட கோரியும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.150 லட்சம் கோடியை மீட்டிட கோரியும், கடந்த 2 ஆண்டுகளில் வராக்கடனில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடியை வசூலித்திட கோரியும், ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் அளிப்போம் என்று பா.ஜ.க. அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், நெய்வேலி மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெய்வேலி நகர செயலாளர் திருஅரசு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துவேல், மாவட்ட பொருளாளர் குப்புசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் மீனாட்சிநாதன், சி.ஐ.டி.யு. பொருளாளர் சீனுவாசன், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் ராஜப்பா, மணிமாறன், கார்த்திகேயன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.